new BB1

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்

Loading...

நெல்லிக்காய் இந்தியாவின் வரப்பிரசாதம். இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்த அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும். 100 கிராம் நெல்லிக்காயில், சத்து 350 கி கலோரி, மாவுசத்து 87 கி, புரதம் 0.5 கி, வைட்டமின் 540 மிகி, கால்கியம் 0.21 மிகி, கொழுப்பு 0.1 கி இதனை பச்சையாகவோ, காய்ந்த பொடியினை உபயோகித்தோ அல்லது ‘ஜூஸ்’ ஆகவோ எடுத்துக் கொள்ளலாம்.

f990a693-e9fb-4b7d-857e-5e5db2c9eb6e_S_secvpfஜூஸ் என்றால் 2 டீஸ்பூன் போதும் காய்ந்த பொடி என்றால் ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீர் கலக்கவும்.

* தொண்டைக்கட்டு ஜலதோஷம் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் சிறிது தேன் அல்லது தண்ணீருடன் கலந்து நாள் ஒன்றுக்கு 3-4 முறை எடுத்துக் கொள்ள நல்ல முன்னேற்றம் பெறுவர்.

* வைட்டமின் சி சத்து : சிறிய காயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் வெகுவாய் முன்னேற்றம் பெறும்.

* அடிக்கடி வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் சிறிது நெல்லிக்காய் ‘ஜூஸ்’ சிறிதளவு தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல தீர்வு கிடைக்கும். இந்த ஜூஸ் குடிக்க ஏற்றது.

* நெல்லிக்காய் மலச்சிக்கலைத் தீர்க்கும்.

* மூட்டுவலி, வீக்கம் ஆகியவற்றை நன்கு கட்டுப்படுத்தும் திறன் நெல்லிக்காய்க்கு உண்டு.

* மன உளைச்சலால் தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்த தூக்கம் நன்கு வரும்.

* மருத்துகளும், மதுவும் உடலில் அதிக நச்சுப் பொருட்களை குவிக்கும். நெல்லிக்காய் இந்த நச்சுப் பொருட்களை நன்கு நீக்கும். இந்த ஜூஸ் கல்லீரல், பித்தப்பை இவைகளை நன்று இயக்க வல்லது.

* கண் எரிச்சல், கண் சிகப்பு போன்றவை நெல்லிக்காய் ஜூஸ் அருந்த தீர்வு பெறும். கண் பார்வை நன்கு இருக்கும்.

* தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்த புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் பாதிப்பு கூட மட்டுப்படும்.

* சதா நெஞ்செறிச்சல் உடையவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் மூலம் ஆரோக்கியம் பெறலாம்.

* உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டுத்திறனை நெல்லிக்காய் கூட்டுவதன் மூலம் பருத்த உடல் இளைக்கும்.

* நுரையீரலும், நரம்பு மண்டலமும் வலுப்பெறுகின்றது.

* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* ரத்தம் சுத்திகரிக்கப்படும். ஹீமோக்ளோபின் சதவீதம் கூடும்.

* கெட்ட கொழுப்பு நீங்கும். கிருமிகள் இராது.

* எந்தபுண்ணும் ஆறும்.

* மஞ்சகாமாலை தோல் பாதிப்பிற்கு சிறந்தது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக பிரிவு 2 வகையை சார்ந்தவர்களுக்கு இது அவசியம் தேவையே.

* புகை பிடிப்பவர்களுக்கு பாதிப்பினை குறைக்கும் திறன் படைத்தது.

Loading...
728
2