new BB1

பச்சைமிளகாய் சட்னி

Loading...

பச்சைமிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய் – 15
புளி – எலுமிச்சை அளவு
கட்டி பெருங்காயம் – சிறிய துண்டு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை போட்டு வதக்கிகொள்ளவும்.
• பெருங்காயம், உப்பு இரண்டையும் சிறிது எண்ணெயில் விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.
• புளியிலிருந்து கொட்டை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும். அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.
• அனைத்தும் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ளவும்.
• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
• நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
• விருப்பப்பட்டால் வெல்லத்தை சேர்க்கலாம்.
• தோசை, இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Loading...
728
2