new BB1

படிப்பாளிகளுக்கு குஷியான செய்தி!

Loading...

படிப்பாளிகளுக்கு குஷியான செய்தி!இந்தியாவில் புத்தகங்கள் படிக்கும் வழக்கமுள்ளவர்களுக்காக, கிண்டில் பேப்பர்வொயிட் என்ற புதிய மின்னூல் வாசிப்பான், 10,999 ரூபாய் (வை-பை மாடல்) மற்றும் 13,999 ரூபாய் (3ஜி மாடல்) ஆகிய விலைகளில் அறிமுகமாகியிருக்கிறது.
முந்தைய கிண்டில் வாசிப்பான்கள், 150 பிக்செல் துல்லியம் உள்ளவை. ஆனால், புதிய கிண்டில் பேப்பர்வொயிட்டின் திரை, 300 பிக்செல் துல்லியம் கொண்டது என்று அமேசான் அறிவித்துள்ளது. ஆனால், புதிய திரை மின் கலனில் சேமித்துள்ள மின்சாரத்தை சற்று அதிகம் உறிஞ்சுவதாக விமர்சனங்கள் வந்துள்ளன. இதற்கு முன்பு வந்த கிண்டில் சாதனங்களை, சில வாரங்களுக்கு ஒரு முறை மின்னேற்றம் செய்தால் போதும் என்றால், கிண்டில் பேப்பர்வொயிட்டிற்கு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும் என்பது தான், சிறிய உறுத்தலாக இருக்கிறது.

Loading...
728
2