new BB1

பிட்டா பிரெட் பிட்ஸா

Loading...

பிட்டா பிரெட் பிட்ஸாபிட்டா ப்ரெட் – 2
வட்டமாக நறுக்கிய தக்காளி துண்டுகள் – 8 – 10
ஒலிவ் துண்டுகள் – 20
ஸ்பினிச் இலைகள் – 10
செடார் சீஸ் – கால் கப்
மொற்ஸரில்லா சீஸ் – கால் கப்
பிட்ஸா ஸோஸ் / ஸல்ஸா- அரை கப்
பேஸில்/ஒரெகானோ – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிட்டா ப்ரெட்டில் ஸோஸ்/ஸல்ஸாவை வைத்து சீராக பரப்பி விடவும்.

அதன் மேல் சிறிது மொற்ஸரில்லா சீஸை தூவவும்.

பின்னர் ஒலிவ், ஸ்பினிச், தக்காளி துண்டுகளை அடுக்கவும்.

அதன் மேல் மீதி சீஸ் மற்றும் உப்பு தூவவும்.

முற்சூடுப்படுத்திய 400 F அவனில் 15 – 20 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.

இலகுவாக செய்யக்கூடிய சுவையான பிட்ஸா தயார்

Loading...
728
2