new BB1

பிரெட் இன் மஷ்ரூம் சாஸ்

Loading...

பிரெட் இன் மஷ்ரூம் சாஸ்

வெங்காயம் – 2,
இஞ்சி-பூண்டு விழுது – தேவைக்கு,
மஷ்ரூம் – 6,
தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன்,
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்,
Tobasco Sauce – 1 டீஸ்பூன்,
Oyster Sauce – 1 டீஸ்பூன்,
மிளகாய் விதை தூள் – 1 டீஸ்பூன்,
ஆரிகனோ பவுடர் – 1/2 டீஸ்பூன்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
பிரெட் – 5 ஸ்லைஸ்,
துருவிய கேரட், குடை மிளகாய், கோஸ் – தேவைக்கு,
ைமதா, உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
பிரெட் உருண்டை…
பிரெட்டை தூளாக்கிக் கொள்ளவும். அத்துடன் துருவிய கேரட், குடை மிளகாய், கோஸ், உப்பு சேர்த்து மைதாவுடன் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சாஸ்…
கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்து வரும் போது மஷ்ரூம் சேர்த்து வேக வைத்து இறக்கவும். மற்றொரு கடாயில் எல்லா சாஸ் வகைகளையும் சேர்த்து, மிளகாய் விதை தூள், ஆரிகனோ பவுடரையும் சேர்க்கவும். சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துச் சேர்க்கவும். சாஸ் பதம் வந்தவுடன் இறக்கவும். அதில் பிரெட் உருண்டைகளையும், வேக வைத்த மஷ்ரூமையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Loading...
728
2