new BB1

பிரெட் பேசன் டோஸ்ட்

Loading...
பிரெட் பேசன் டோஸ்ட்என்னென்ன தேவை?
பிரெட் – 4 ஸ்லைஸ்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
கடலை மாவு – 1 கப்,
துருவிய கேரட் – 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 (சிறியது),
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டீஸ்பூன்,
உப்பு – 1 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒவ்வொரு பிரெட் துண்டையும் 2 முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும். கடலை மாவுடன் துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, அத்துடன் 1/2 அல்லது 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக இந்த மாவில் தோய்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும். தக்காளி கெட்ச்சப்புடன் பரிமாறவும்.
Loading...
728
2