new BB1

பூமியைப் போன்ற ஒரு கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Loading...

பூமியைப் போன்ற ஒரு கோள் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புசூரிய மண்டலத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கோள் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட, கோள்களிலேயே மிகச் சிறிய கோள் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கோள் கிலிசி 876 என்ற அதன் தாய்க் கோளைச் சுற்றி வருகிறது.

இந்த இரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் 20 லட்சம் மைல்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல் ஆகும். இந்த கோள் பூமியைப் போல் ஏழரை மடங்கு பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 15 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள் உள்ளது. பூமியைப்போல இதிலும் மலைகள் உள்ளன. ஆனால் உயிரினங்கள் வசிக்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு மிக மிக வெப்பமாக உள்ளது. இதில் 400 முதல் 750 டிகிரி வெப்பம் உள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜூபிடரில் இருப்பதைப் போல அங்கு வாயுக்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றும், இது நமது சூரிய மண்டலத்திலிருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Loading...
728
2