new BB1

பெண்ணியம் மலர வேண்டுமா?

Loading...

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே

பெண்ணியம் மலர வேண்டுமா

உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும்.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக்

கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும்

ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும். இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா?

எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.

இல்லை

இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா?

பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான்

பெண்ணியமாகும். இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும்,

ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப்

பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின்

சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?

திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ

அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக்

காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள்.

பெண்கள் கல்வியில்

முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில்

முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை. இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான

பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில்

மட்டுமே இருக்கக்கூடும்.

ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள்

விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு,

விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ

அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின்

ஆணி வேராக இருக்கக்கூடும்.

வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும்

பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை,

மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.

Loading...
728
2