new BB1

பேதியை குறைக்கும் கொய்யா இலை

Loading...

15208

கொய்யா சிறு மரவகையை சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா மற்றும் தென் மெக்சிகோ. தமிழகமெங்கும் பழத்திற்காகப் பயிரடப்படுகிறது.

கொய்யாவின் மருத்துவப் பயன்கள்

ஒரு பிடி கொய்யா இலையை அரித்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராக காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி , மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

குழந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இரண்டு கைப்பிடியளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிகொள்ள வேண்டும்.

நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும்.

ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும். கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

மேலும் இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும். பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

Loading...
728
2