new BB1

பைனாப்பிள் போளி

Loading...

பைனாப்பிள் போளி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 250 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
தேங்காய் – அரை மூடி,
ஏலக்காய் தூள் – சிறிதளவு,
நெய் – 100 மிலி,
மஞ்சள் தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய் – சிறிதளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மைதா மாவில் மஞ்சள், உப்பு சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து அதன் மேல் நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது கெட்டியாக பாகு காய்ச்சி அரைத்த விழுதை ஏலக்காயுடன் சேர்த்து பாகுடன் நன்றாக கிளறி சுருண்டு வந்ததும் இறக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி உள்ளே துருவிய தேங்காய், பைனாப்பிள் பூரணத்தை மத்தியில் வைத்து மூடி போளியாக தட்டவும். பின் தோசை கல்லில் நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். (பருப்பு போளி, தேங்காய் போளி, சிறு பருப்பு போளி, ஆப்பிள் போளி, பேரீச்சம் பழம் போளி என்று இதே முறையில் செய்யலாம்).

Loading...
728
2