new BB1

ப்ரெட் ஊத்தாப்பம்

Loading...

ப்ரெட் ஊத்தாப்பம்ப்ரெட் – 4
இட்லி மாவு – ஒரு கப்
கொத்தமல்லித்தழை – 2 கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக பொடி செய்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதன் மேல் அலசிய கொத்தமல்லித் தழையை தூவி கலந்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் பொடி செய்த மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து மாவில் வைத்து ப்ரெட்டின் இரண்டு புறங்களிலும் மாவு படரும்படி நன்கு தோய்த்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய வைக்கவும். காய்ந்ததும் தோய்த்து வைத்திருக்கும் ப்ரெட்டை போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

2 நிமிடம் கழித்து வெந்ததும் திருப்பி போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பிறகு மீண்டும் 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

ப்ரெட் ஊத்தாப்பம் தயார். மிக எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி. இதை சாஸுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்

Loading...
728
2