new BB1

மட்டன் கொத்துக்கறி கட்லெட்

Loading...

மட்டன் கொத்துக்கறி கட்லெட் கீமாவுட‌ன் சுருட்டி கொள்ள‌:
கீமா – கால் கிலோ
மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
க‌ர‌ம் ம‌சாலா பொடி – கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
வேக‌ வைக்க‌:
உருளைக்கிழங்கு – நான்கு (நடுத்தரமான அளவு)
கேரட் – இரண்டு (சிறிய‌து)
வெங்காயம் – மூன்று (பெரியது) p
பச்சைமிளகாய் – இரண்டு
கொத்தமல்லி தழை – ஒரு க‌ட்டு
க‌ர‌ம் ம‌சாலா பொடி – கால் தேக்க‌ர‌ண்டி
பிரெட் கிரெம்ஸ் – க‌ட்லெட் பிர‌ட்டி கொள்ள‌ தேவைக்கு
முட்டை – இரண்டு

மட்டன் கொத்துக்கறியை(கீமா) நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து (சுருட்டி கொள்ளவும்)வேக வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி கீரையை மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கவும்.

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். கடைசியாக மீதமுள்ள கரம் மசாலாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

கலந்து வைத்திருக்கும் கீமா கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும், முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்.

உருட்டிய உருண்டைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரெம்ஸில் நன்கு எல்லா பக்கமும் படுவதுபோல் செய்து தனித்தனியாக வைக்கவும். அரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து கட்லெட்டை போட்டு சிவந்த நிறம் வந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும். கரண்டியை போட்டு கிண்டினால் விண்டு போய் விடும். ஒரு போர்க்கால் மெதுவாக திருப்பி விடவும்.

சுவையான மட்டன் கொத்து கறி கட்லெட் ரெடி.

Loading...
728
2