new BB1

மாங்காய் அடை

Loading...

மாங்காய் அடை

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 2 ஆழாக்கு,
இஞ்சி – அரை அங்குலத் துண்டு,
பச்சை மிளகாய் – 4,
உப்பு – தேவைக்கேற்ப,
தேங்காய்த் துருவல் – சிறிது,
உருளைக்கிழங்கு – 1,
கிளிமூக்கு மாங்காய் -1,
கடுகு – தாளிப்பதற்கு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

இட்லி அரிசியைக் கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து முதலில் அரைத்த பின் இட்லி அரிசியை கரகரப்பாக அரைக்கவும். கடைசி யில் துருவிய தேங்காய், உருளைக்கிழங்கு துருவல், மாங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். அரைத்த உடனே அடை சுடலாம். சிறிது கனமான அடைகளாக சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். மிக ருசியாக இருக்கும்.

Loading...
728
2