new BB1

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

Loading...

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா  இதெல்லாம் ட்ரை பண்ணுங்கஒருவர் 50 முதல் 100 முடிகள் வரை இழப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை என்றும், இது சாதாரணம் என்றும் தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவர் மிக அதிகமாக முடியை இழக்கும் போது தலையில் திட்டுக்கள் தோன்றும். இதுவே வழுக்கை என்று அறியப்படுகிறது. இருப்பினும், தற்போது தனது 30 வயதில் ஒரு மனிதன் வழுக்கையாக இருப்பது ஒரு பொதுவான நிகழ்வாக இருக்கிறது. இது மன அழுத்தம், முறையற்ற உணவு அல்லது ஹார்மோன் கோளாறுகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. வீட்டிலேயே இதனை சரி செய்வதற்கான சில எளிய பயனுள்ள குறிப்புகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை முடியைப் பாதுகாத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். தினசரி நம் வீட்டில் கிடைக்கும் பல உணவுகளை கொண்டு இயற்கை சிகிச்சை பொருள்கள் தயாரித்து, முடி வளர்ச்சியை தூண்டலாம்.

முட்டை முட்டை சல்பர் நிறைந்தது மற்றும் பிற பல புரதங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. செலினியம், ஜிங்க், அயர்ன், அயோடின், பாஸ்பரஸ் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. முடி வளர்ச்சிக்கு முட்டை பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக ஆலிவ் எண்ணெயுடன் பயன்படுத்தும் போது சிறந்த பயனளிக்கிறது. ஒரு முட்டை வெள்ளைக்கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து வீட்டிலேயே சொந்தமாக முடி இழப்பு பேஸ்ட் தயாரிக்கவும். அதனை உங்கள் உச்சந்தலை அல்லது முடியில் நன்றாக தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் நன்றாக சுத்தம் செய்யவும்.

நெல்லிக்காய் முடி இழப்பு பிரச்சனை மற்றும் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த வழிமுறையாக உள்ளது. இதற்கு ஆதாரமாக இருப்பது இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அணுக்கள் வலுவூட்டி. இதனை உங்கள் உச்சந்தலையில் தேய்க்கலாம். அனால் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கும் சுகாதாரத்திற்கும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கலவை தயாரிக்க அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது நல்வாழ்வு கடைகளில் நெல்லிக்காய் பொடியை வாங்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொண்டு அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதனை உச்சந்தலையில் தேய்த்து உலர்ந்த பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்.

Loading...
728
2