new BB1

முட்டையை விட அதிக புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்கள்!

Loading...

முட்டையை விட அதிக புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்கள்!!பலரும் முட்டையில் தான் புரோட்டீன் அதிகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முட்டையை விட அதிக அளவில் ஒருசில உணவுகளில் புரோட்டீன் வளமாக உள்ளது. ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும்.

சோயா பீன்ஸ் 1/4 கப் சோயா பீன்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே நீங்கள் சைவ உணவாளியாக இருந்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் சோயா பீன்ஸ் கொண்டு மசாலா, குருமா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தயிர் அனைவருக்கும் தயிரில் புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அதில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.

சீஸ் பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சீஸை உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும் வெண்ணெயை விட சீஸ் தான் சிறந்ததும் கூட.

பூசணிக்காய் விதை பூசணிக்காய் விதையில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே அதனை தினமும் சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக் கொள்வது நல்லது.

Loading...
728
2