new BB1

முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி

Loading...

முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறிமுருங்கைக்காய் – 250 கிராம்
பலாக்கொட்டை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 30 கிராம்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பற்கள்
கறித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் புளி – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 அல்லது 2 நெட்டுக்கள்
நல்லெண்ணெய் அல்லது ஒவிவ் ஓயில் – 4 மேசைக்கரண்டி

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி தோல் நீக்கி வைக்கவும். முருங்கைக்காயை 2 அங்குலத்துண்டாக நறுக்கி பாதியாக்கவும். பலாகொட்டையை பாதியாக நறுக்கி தோல் நீக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பச்சைமிளாகயுடன் முருங்கைக்காயைப் போட்டு சிறிது வதக்கவும்.

பலாகொட்டையை சேர்த்து உப்பு போட்டு காய்கறிகளுக்கு மேல் நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி குறைந்த தீயில் வைத்து நன்கு வேக விடவும்.

பாதியளவிற்கு வெந்ததும் கறித்தூள் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும் கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

இறக்கி வைத்த பின்னர் அதில் எலுமிச்சம் புளி சேர்க்கவும்.

சுவையான முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி ரெடி.

Loading...
728
2