new BB1

யோகப் பயிற்சிகள் அங்கங்கள்

Loading...

யோகா மனித வாழ்வின் ஐந்து “கவச உறைகளை” குறிப்பிடுகிறது. அவை

யோகப் பயிற்சிகள் அங்கங்கள்

1. உடல்
2. பிராணன் (நாடிகள் வழியே பெருகும் ஜீவசக்தி)
3. மனது, எண்ணங்களும், உணர்ச்சிகளும் உண்டாகுமிடம்
4. ஞானம், அறிவு
5. ஆத்மா, பரமானந்த நிலை. முதல் மூன்று நிலைகள் பாதிக்கப்பட்டால் உடலின் சக்தி உடலெங்கும் சரிவர பரவாது. நோய்கள் தோன்றும்.

• நமது துயரங்களுக்கெல்லாம் காரணம் புலனேந்திரியங்களுக்கு அடிமையாகி, கோப, காமக்குரோதங்கள், பணத்தாசை பிடித்து அலைவது. ஆனால் நம்முன் உறையும் ஆத்மாவை, அறிந்து கொண்டால், மன, உடல் நோய்கள் மறையும். இதற்கு உதவுவது யோகப் பயிற்சி.

யோகப் பயிற்சிகள் கீழ்க்கண்டனவற்றை அங்கமாக கொண்டுள்ளன.

1. நற்காரியங்கள் (சத்கிரியா) இதனால் உள்ளமும் உடலும் தூய்மை அடைகின்றன. இதன் விவரங்கள் “சத்கர்மங்கள்” என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன.
2. யோகாசனங்கள் – உடலின் உள்ளுறுப்புகள், தசைகள் இவற்றுக்கு வலிமை சேர்க்கின்றன.

3. பிராணாயாமா – ‘பிராண’ சக்தியை உடலெங்கும் பரவ செய்யப்படும் ‘மூச்சுக்’ கட்டுப்பாடு.

4. தியானம் – தன்னைத் தானே அறிய உதவும் தியானம் மன அமைதியை தரும்.

5. யோக முத்திரைகள் யோகாவின் ஒரு பாகம்.

இந்த முத்திரைகள் உடலில் நாளமில்லா சுரப்பிகள் இருக்கும் இடத்திலேயே சுரூபமாக இருப்பவை. யோக முத்திரை பயிற்சிகள் இவற்றை ஊக்குவிக்கும். அதீத உடல் பருமன், ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு யோகா ஒரு வரப்பிரசாதம். யோகத்தை பயின்று கடைப்பிடிக்க நம்பிக்கையும் மன உறுதியும் தேவை. பயின்ற பின் கிடைக்கும் பலன்கள் உடல், உள்ளங்களின் முழு ஆரோக்கியம்.

Loading...
728
2