new BB1

ரஸ்க் சாக்லெட்

Loading...

ரஸ்க் சாக்லெட்மேரி பிஸ்கெட் – 6
ரஸ்க் – 6
கோக்கோ பவுடர் – 2 மேசைக்கரண்டி
ப்ரூ தூள் – ஒரு மேசைக்கரண்டி
முந்திரி – 10
கன்டன்ஸ்ட் மில்க் – அரை கப்

மேரி பிஸ்கெட், ரஸ்க் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ரஸ்க் பொடி, மேரி பிஸ்கெட் பொடி, கோக்கோ பவுடர், ப்ரூ தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதனுடன் நறுக்கின முந்திரி, கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்து ஒன்றாக பிசையவும்.

பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து ப்ரீசரில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து வட்டமாக வெட்டி பரிமாறவும்.

சுவையான எளிதில் செய்யக்கூடிய ரஸ்க் சாக்லெட் ரெடி.

Loading...
728
2