new BB1

வயிற்று வலியை குணமாக்கும் அஸ்வகந்தா

Loading...

15209

இது தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில்

 

பயிரிடப்படுகிறது. அஸ்வகந்தாவின் வேர் மற்றும் விதைகள் பகுதிகள் பலன் தரக்கூடியவை. இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும்.

வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப்படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இதன் சுவை சகப்பு. வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம், இருமல், வீக்கம், தூக்கமின்மை, சோர்வு, வயிற்று புண், உடல் வலி, நரம்புவியாதிகள், ஆகிய நோய்களை நீக்கி, ஆண்மை பெருக்கம் உண்டாக்கும்.

காமம், பித்த நீர்ப்பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், உடலுக்கு நல்ல பலம், அழகு, நீண்ட ஆயுள் போன்றவற்றையும் தருகிறது. அசுவகந்தாவின் வேர் இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியை ஊக்குவித்து மறதியை போக்கும்.

வேரின் பொடி சமஅளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும். அதிமதுரம் பொடி 100 கிராம், சீமை அமுக்கூரம் பொடி 100 கிராம் அசுவகந்தாவை கலந்து ஒரு கரண்டி வீதம் தினமும் 3 வேளை ஆகாரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும்.

Loading...
728
2