new BB1

விவாகரத்து மாரடைப்பை ஏற்படுத்தும்

Loading...

விவாகரத்தானவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அமெரிக்க ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக சமூகவியல் துறையைச் சேர்ந்த Matthew Dupre தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடையம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து Matthew Dupre கூறுகையில்; விவாகரத்தானது மிகவும் ஆபத்தான மாரடைப்பினை ஏற்படுத்துமென்றும் இது உயர் இரத்த அழுத்தம், புகைத்தல் மற்றும் நீரிழிவு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை விட உயர்வானது என்றும் கூறியுள்ளார்.

விவாகரத்து மாரடைப்பை ஏற்படுத்தும்

1992 ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டுவரை 45 க்கும் 65 க்கும் இடைப்பட்ட வயதுடைய 15000 க்கும் அதிகமானவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்களின் மூலம் அவர்களில் 7.7 வீதமானவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் சடுதியான மாரடைப்பு , அல்லது மாரடைப்பு மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். அதற்கான காரணியாக அவர்களது திருமண வாழ்க்கையே இருந்துள்ளது.
விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்ந்த அளவிலான மாரடைப்பு ஆபத்தினை கொண்டிருந்தனர் என்பது ஆய்வின் மூலம் நிருபணமாகியுள்ளது. விவாகரத்தான ஆண்களைவிட பெண்களுக்கு உயர்ந்த அளவிலான மாரடைப்பு அபாயம் காணப்பட்டது.

திருமண பந்தம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிக முக்கியமானது. எனினும் விவாகரத்தினால் ஆண்களை விடவும் உயர்ந்த அளவிலான உடல் நலப் பாதிப்பு பெண்களுக்கே என்றும் Matthew Dupreகுறிப்பிட்டுள்ளார்.
ஜேர்னல் ஒப் த அமெரிக்கன் அசோசியேஷன் ( journal of the American Heart Association )நாளிதழில் வெளிவந்துள்ள குறித்த ஆய்வு பற்றிய விடையத்தில் விவாகரத்தால் வரக்கூடிய நீடித்த மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Loading...
728
2