new BB1

வீட்டிலும் வைக்கலாம் அழகு நிலையம்

Loading...

வீட்டிலும் வைக்கலாம் அழகு நிலையம்நம்மை நான்கு பேர் வியப்புடன் பார்த்து அழகை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலிடாத பெண்கள் மிகக் குறைவு. அதுவும் விழாக்கள், திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். எந்நாளும்போல் ஏதோ குளித்தோம், ஒப்பனை செய்துகொண்டோம் என்று சாதாரணமாகச் செல்வது விழாக்களுக்கு பொருந்தாத ஒன்று. அதற்காக தினந்தோறும் அழகு நிலையம் செல்வது என்பது சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு ஒத்துவராத ஒன்று. மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால், அது சரியாக இருக்கும்.

வேறு ஏதாவது வழி உண்டா? என்று யோசிக்கும்பொழுது மிக எளிமையான சில செயல்முறைகல் கீழே தரப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளை ஒரு மாத காலமாவது தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் அழகு உங்களுக்கே வியப்பை உருவாக்கிவிடும்.
முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக்கிங்பற்றி பார்க்கலாம்.

1. முக அலங்காரம்:

ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவணும்.

அடுத்தாற்போல ஒரு தேக்கரண்டி தயிருடன் அரை தேகக்ரண்டி எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் கழுவிவிடலாம். மேலும், கடலை மாவில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரும் ஒரு தேக்கரன்டி தேனும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிய பின்பு 20 நிமிடங்கள் கழித்து அதைக் கழுவிவிடலாம்.

உளுந்தை நன்றாக அரைத்து அத்துடன் சம அளவு பால் மற்றும் தேன் கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவுவதும், சிறந்த பேஸ்பேக் முறையே.

2. கால், பாதங்களுக்கு மென்மையும் பொலிவும் ஏற்பட:

ஐந்து மேஜைக்கரண்டி ரவையை நீரில் குழைத்து கால் மற்றும் பாதங்களில் தடவியபின், 30 நிமிடம் கழித்து கழுவிவிடவும். ஆறு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் இரண்டு ஸ்பூன் கிளிஸரின், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை கால்களில் தடவி அரை மணி நேரம் சென்றதும் கழுவி விடலாம்.

3. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க :

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்ணிமைக்கு மேலாக வைத்து அரை மணி நேரம் ஓய்வெடுக்கவும். பின்பு தேங்காய்ப் பாலினைத் தொட்டு உங்கள் மோதிர விரலால், கண்ணைச் சுற்றி மஸாஜ் செய்யவும்.

4. உடலை டியோடரைஸ் செய்ய:

நான்கு துண்டு கற்பூரம், 100மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து உடல் முழுவதும் தேய்க்கவும். பின்பு குளிக்கவும். குளிக்கும் நீரில் சிறிது ஆப்டர் ஷேவ் லோஷன் கலந்தால், இன்னமும் சிறப்பாக இருக்கும்.

5. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்க:

எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில், இரவு ஊற வைத்து, மறுநாள் காலை அதை அரைத்து , ஒரு தேக்கரண்டி பாலுடன் கலந்து முகத்தில் பூசினால், , கரும் புள்ளிகள் மறையும். மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பாதாம் மாஸ்க் நல்லது.

Loading...
728
2