new BB1

வீட்டிலேய செய்யும் எளிமையான புதுவகை ஃபேஷியல்கள்

Loading...

வீட்டிலேய செய்யும் எளிமையான புதுவகை ஃபேஷியல்கள்1.மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் முகத்தில் பூசி அகற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

2 . தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்

3. ஓட்ஸ் ஃபேஷியல்: ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.

4. பாதாம் ஃபேஷியல்: பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து 2 வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள்.

Loading...
728
2