new BB1

வெங்காய கறி

Loading...

வெங்காய கறிஆட்டு கறி – முக்கால் கிலோ
வெங்காயம் – 3 (பெரியது)
மிளகு, சீரகத்தூள் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – முக்கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு.
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – ஒரு சிறு துண்டு

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஏலம், கிராம்பு, பட்டை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு சுற்று சுற்றி தனியாக எடுத்து வைக்கவும். வெங்காயம் மிளகாயையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி தனியாக எடுத்து வைக்கவும்

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மிளகாயை போட்டு வதக்க இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின் கறி, மஞ்சள் தூள் போட்டு வதக்கி உப்பு, தண்ணீர் விட்டு வேக விடவும்.

கறி வெந்ததும் இறக்கி விடவும். வெங்காயக் கறி ரெடி

Loading...
728
2