new BB1

வெந்தய மோர்க்குழம்பு

Loading...

வெந்தய மோர்க்குழம்புஎன்னென்ன தேவை?

தயிர் – 2 கப்,
உப்பு – 1 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்.

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மணத்தக்காளி வத்தல் – 3 டீஸ்பூன்.

வறுத்து, விழுதாக அரைக்க…

வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 10
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும். தயிரில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து சிலுப்பிக் கொள்ளவும். (மிக்ஸியில் ஓரிரு சுற்றும் சுற்றிக் கொள்ளலாம்). தயிருடன் அரைத்த விழுது, உப்புச் சேர்த்து ஒரு கொதிவிடவும். தேங்காய் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்து, குழம்பில் சேர்க்கவும்.

Loading...
728
2