new BB1

வைபர் பயன்படுத்தும் நான்கு கோடி பேர்

Loading...

இந்தியாவில் தன் சேவையைக் கடந்த 2013 டிசம்பரில் வைபர் தொடங்கியது. போட்டி நிறைந்த, இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்புவதற்கான புரோகிராம் களிடையே தன் திறனை மட்டுமே நம்பி, வைபர் களத்தில் இறங்கியது. இலவசமாகத் தகவல்கள் அனுப்பும் வசதி மட்டுமின்றி, துல்லியமாகக் குரல் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் நான்கு கோடி பேர் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபர் பயன்படுத்தும் நான்கு கோடி பேர்

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 200% உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் Viber Public Chats என்ற ஒரு வசதியைப் புதியதாக அறிமுகப்படுத்தி பெயர் பெற்றது. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள், உரையாடல் குழுக்களைக் கண்டறிந்து, தங்களூக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இந்தியாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுவான உரையாடற் குழுக்கள், வைபரில் இயங்குகின்றன. நவநாகரிகம், அழகுக் கலை, சுற்றுலா, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு என இக்குழக்கள் அமைந்துள்ளன.
இதன் வாடிக்கையாளர்கள், 193 நாடுகளில், 50 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2