new BB1

ஸ்டஃப்ட் கறிமிளகாய்

Loading...

ஸ்டஃப்ட் கறிமிளகாய்கறி மிளகாய் – 500 கிராம்
மீன் டின் – ஒன்று (425 கிராம்)
கிழங்கு – 150 கிராம்
பெரிய வெங்காயம் – ஒரு பாதி
நருவல் மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
கோதுமை மாவு – 3/4 கோப்பை
எண்ணெய் – பொரிக்க

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கிழங்கைக் கழுவித் துடைத்து விட்டு முட்கரண்டியால் சுற்றிலும் குத்திக் கொள்ளவும். அதை இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்து, மீண்டும் திருப்பிப் போட்டு இரண்டு நிமிடங்கள் வேக விடவும். (கிழங்கு இரு புறமும் மென்மையாகி விட்டால் போதும்)

கறிமிளகாயைக் கழுவி நீளவாக்கில் பிளந்து கொள்ளவும். விதைகள் உட்பட காயின் உட்பகுதியை நீக்கிக் கொள்ளவும். காம்பினை நீக்க வேண்டாம்.

வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

கிழங்கைப் பிளந்து ஆற வைத்து, தோலை நீக்கி விட்டு மசித்து வைத்துக் கொள்ளவும்.

காய்களை மைக்ரோவேவ் அவனில் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். திருப்பிப் போட்டு மீண்டும் மூன்று நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

மிளகாய் மற்றும் மாவை தவிர்ந்த மீதி அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை மிளகாய்களுள் கவனமாக நிரப்பி இறுகப் பிடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாவுடன் சிறிது உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து, தயாராக நிரப்பி வைத்துள்ள காய்களை மாவுக் கரைசலில் தோய்த்து ஒன்றிரண்டாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும். காய்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளாமல் போட்டு பொரிந்ததும், பிரிந்து விடாமல் கவனமாக ஒரு முறை மறு பக்கமும் புரட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரிந்ததும் எடுத்து பேப்பர் டவலில் வடிய விடவும்.

சுவையான ஸ்டஃப்டு கறிமிளகாய் ரெடி.

Loading...
728
2