new BB1

ஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல்

Loading...

ஸ்பினிச் டோபு ரோல் & உருளை ரோல்பஃப் பேஸ்ரி ஷீட் – 2
ஸ்பினிச் கீரை – ஒரு கட்டு
டோபு – 8 Oz
அவித்த உருளைக்கிழங்கு – 2
நறுக்கின வெங்காயம் – அரை கப்
நறுக்கின உள்ளி – 2 மேசைக்கரண்டி
பெரிய சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் – ஒரு மேசைக்கரண்டி
மசாலா தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பார்மஜான் / மொற்சரில்லா சீஸ் – சிறிது
ஒலிவ் எண்ணெய் – சிறிது

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் பாதியளவு வெங்காயம், உள்ளி, பெரிய சீரகம், கடுகு போட்டு வதக்கவும். பின்னர் அதனுள் டோபுவை உதிர்த்து போட்டு கிளறவும்.

டோபு நன்கு வதங்கியதும் (சிறிது பிரவுணாக வரும்) ஸ்பினிச் கீரையை அரைத்து ஊற்றி கிளறவும். பின்னர் அதில் பாதியளவு மிளகாய்த்தூள், மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சுருள கிளறி இறக்கவும். (இதனை சமோசா, ஸ்பிரிங் ரோல், கறி பண் எல்லாவற்றுக்கும் ஃபில்லிங் ஆக பயன்படுத்தலாம். தனியே சாதம், நாணுடனும் சாப்பிடலாம்.)

ஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த டோபு-ஸ்பினிச் கலவையை சீராக பரப்பவும்.

பின்னர் இதனை ரோல் போல உருட்டி 1 அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.

ஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.

மற்றொரு மைக்ரோ அவன் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் மீதி வெங்காயம், பெரிய சீரகம், கடுகு சேர்த்து 4 நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும்.

பின்னர் இதனுள் உதிர்த்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். மீண்டும் 8 நிமிடங்கள் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும். (இடையில் ஒருமுறை கிளறி வைக்கவும். இதனையும் சமோசா, ஸ்பிரிங்க் ரோல், பற்றீஸ், கறி பண் ஃபில்லிங்காக வைக்கலாம். சாதம் ரொட்டியுடனும் சாப்பிடலாம்)

ஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த உருளை கறியை சீராக பரப்பவும். பின்னர் இதனை ரோல் போல உருட்டி ஒரு அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.

ஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.

பின்னர் 400 F-ல் முற்சூடுப்படுத்திய அவனில் வைத்து 15 – 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ரோல் இளம் பிரவுண் நிறமானதும் எடுத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.

Loading...
728
2