new BB1

ஸ்பைசி ஓட்ஸ் மோர்

Loading...

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – அரை கப் (வறுத்து கொள்ளவும்)
தயிர் – அரை கப்
ப.மிளகாய் – 2
இஞ்சி துருவியது – 1 ஸ்பூன்
புதினா இலை – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – பாதி
தண்ணீர் – 1 கப்

ஸ்பைசி ஓட்ஸ் மோர்

செய்முறை :

• ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

• அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

• இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

Loading...
728
2