new BB1

ஹேர் டை போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் – போக்கும் வழிமுறைகள்

Loading...

இளம்பெண்களிடையே தலைமுடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. தற்காலிக டையில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும்.
வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது.

ஹேர் டை போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் – போக்கும் வழிமுறைகள்

தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும். மீசைக்கும் ஹேர்டை போடும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும்.
தலைக்கு டை செய்யும் ஒவ்வொரு முறையும் அவரது ஆயுளில் 15 நாட்களும், மீசைக்கு டை செய்யும் ஒவ்வொரு முறையும் அவரது ஆயுளில் 30 நாட்கள் குறைவதாக சொல்லப்படுவதுண்டு. பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும்.

பாதிப்பை குறைக்க :
டை, முடியோடு செயல்பட அரை மணி நேரம் தேவைப்படும். (அதைவிட குறைந்த நேரத்தில் முழுமைபெறும் டையும் உள்ளது). குறிப்பிட்ட நேரம் கடந்ததும் தரமான ஷாம்புவை பயன்படுத்தி கழுவ வேண்டும். டை போட்டிருக்கும்போது நிறைய தண்ணீர் பருகி, இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிக்கவேண்டும். அதன் மூலம் விஷத்தன்மை வெளியேறும் வாய்ப்பு உண்டு.

‘ஹேர் டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம். உடனடியாக நிறம் மாற்றும் ‘இன்ஸ்டன்ட் டை’ வகைகளை பயன்படுத்த கூடாது. காலாவதியான ‘ஹேர் டை’யை, பயன்படுத்தக்கூாது.

எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும். முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.

Loading...
728
2