new BB1

15 நிமிடத்தில் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

Loading...

15 நிமிடத்தில் அழகாக ஜொலிக்க வேண்டுமா இதோ சில டிப்ஸ்.......சிலருக்கு நன்கு தூங்கி காலையில் எழுந்த பின்னரும் முகம் பொலிவின்றி காணப்படும். இதனால் நமக்கே நம் முகத்தைக் கண்டு வெறுப்பு ஏற்படும். அப்படி உங்கள் முகம் காலையில் பொலிவின்றி இருந்தால், ஒருசில செயல்களை செய்தால் பொலிவாக்கலாம். அதிலும் அலுவலகத்திற்கு காலையில் கிளம்பும் போது, அழகைப் பராமரிக்க நேரம் அதிகம் இருக்காது. எனவே குறைந்த நேரத்திலேயே முகத்தை பொலிவாக்க சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை காலை வேளையில் மட்டுமின்றி, நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் முன் பின்பற்றினாலும், முகம் பொலிவோடு மின்னும். சரி, இப்போது 15 நிமிடங்களில் முகத்தை அழகாக ஜொலிக்க வைப்பது எப்படி என்று பார்ப்போமா!!!

எண்ணெய் பசை சருமத்தினர் மேக்கப் போட்டால், விரைவில் களைந்துவிடும். எனவே இதனை தவிர்க்க, மேக்கப் போடும் முன், டோனர் பயன்படுத்தி பின் மேக்கப் போட்டால், மேக்கப் நீண்ட நேரம் நிலைக்கும்.

உதட்டில் உள்ள கருமை உதட்டில் கருமைகள் இருந்தால், அவற்றை மறைக்க பிங்க் அல்லது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டுக் கொண்டால், உதட்டில் உள்ள கருமைகளை மறைத்துவிடலாம்.

பிம்பிளுக்கு டூத் பேஸ்ட் உங்கள் முகத்தில் பிம்பிள் திடீரென்று வந்திருந்தால், அவ்விடத்தில் டூத் பேஸ்ட்டை வைத்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் பிம்பிள் உலர்ந்துவிடும்.

Loading...
728
2