new BB1

5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்ட ZTE பிளேட் வி2 ஸ்மார்ட்போன் அறிவிப்பு

Loading...

5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்ட ZTE பிளேட் வி2 ஸ்மார்ட்போன் அறிவிப்புZTE நிறுவனம் அதன் புதிய பிளேட் தொடர் ஸ்மார்ட்போனான ZTE பிளேட் வி2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் உலகளவிய கிடைக்கும் விவரங்கள் பற்றி தெரியவில்லை மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் ஸ்மார்ட்போனை பற்றி பட்டியலிடப்படவில்லை. (PhoneArena வழியாக) Blogofmobile நிறுவனத்தின்படி, ZTE பிளேட் வி2 ஸ்மார்ட்போனின் குறிப்புகள் குறித்து விரிவான தகவல்களை அறிவித்துள்ளது, ஆனால் விலை மற்றும் உலகளவிய கிடைக்கும் விவரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.
சிங்கில் சிம் கொண்ட ZTE பிளேட் வி2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ரேம் 1 ஜிபி உடன் இணைந்து 64-பிட் 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. பிளேட் வி2 ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளன.
இந்த இரண்டு கேமராக்களிலுமே ஒரு பேக்சைடு இலுமினேட்டர் (BSI) CMOS இமேஜ் சென்சார் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய(குறிப்பிடப்படாத அதிகபட்ச ஆதரவு திறன்) 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ZTE பிளேட் வி2 இணைப்பு விருப்பங்கள், 4G LTE கேட் 4, Wi-Fi, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ்/ எ- ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். கைபேசியில் 2400mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.

Loading...
728
2