new BB1

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா  இதெல்லாம் ட்ரை பண்ணுங்கஒருவர் 50 முதல் 100 முடிகள் வரை இழப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை என்றும், இது சாதாரணம் என்றும் தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவர் மிக அதிகமாக முடியை இழக்கும் போது தலையில் திட்டுக்கள் தோன்றும். இதுவே வழுக்கை என்று அறியப்படுகிறது.
இருப்பினும், தற்போது தனது 30 வயதில் ஒரு மனிதன் வழுக்கையாக இருப்பது ஒரு பொதுவான நிகழ்வாக இருக்கிறது. இது மன அழுத்தம், முறையற்ற உணவு அல்லது ஹார்மோன் கோளாறுகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
வீட்டிலேயே இதனை சரி செய்வதற்கான சில எளிய பயனுள்ள குறிப்புகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை முடியைப் பாதுகாத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். தினசரி நம் வீட்டில் கிடைக்கும் பல உணவுகளை கொண்டு இயற்கை சிகிச்சை பொருள்கள் தயாரித்து, முடி வளர்ச்சியை தூண்டலாம்.
முட்டை
முட்டை சல்பர் நிறைந்தது மற்றும் பிற பல புரதங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. செலினியம், ஜிங்க், அயர்ன், அயோடின், பாஸ்பரஸ் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. முடி வளர்ச்சிக்கு முட்டை பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக ஆலிவ் எண்ணெயுடன் பயன்படுத்தும் போது சிறந்த பயனளிக்கிறது. ஒரு முட்டை வெள்ளைக்கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து வீட்டிலேயே சொந்தமாக முடி இழப்பு பேஸ்ட் தயாரிக்கவும். அதனை உங்கள் உச்சந்தலை அல்லது முடியில் நன்றாக தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் நன்றாக சுத்தம் செய்யவும்.
நெல்லிக்காய்
முடி இழப்பு பிரச்சனை மற்றும் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு சிறந்த வழிமுறையாக உள்ளது. இதற்கு ஆதாரமாக இருப்பது இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அணுக்கள் வலுவூட்டி. இதனை உங்கள் உச்சந்தலையில் தேய்க்கலாம். அனால் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கும் சுகாதாரத்திற்கும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கலவை தயாரிக்க அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது நல்வாழ்வு கடைகளில் நெல்லிக்காய் பொடியை வாங்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொண்டு அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதனை உச்சந்தலையில் தேய்த்து உலர்ந்த பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்.
பூண்டு மற்றும் வெங்காயம்
முடி வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை சல்பர் மேம்படுத்துகிறது. பூண்டு மற்றும் வெங்காயம் முடி வளர்ச்சியை தூண்டும் சல்பர் ஆதாரத்தை அதிக அளவில் கொண்டுள்ளன. முடி வளர்ச்சியைத் தூண்ட பூண்டை இவ்வாறு பயன்படுத்தவும். 4-5 பூண்டு துண்டை நசுக்கி அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் அந்த கலவையை குளிர்விக்க வேண்டும். குளிர்வித்த பின் அதனை உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். வெங்காயத்தினை வெட்டுவதன் மூலம் கிடைக்கும் சாற்றினை உச்சந்தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.
மருதாணி
ஆசிய மக்களின் முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் வலிமையான ஆற்றலைக் கொண்ட மருதாணியை பயன்படுத்துவதாக, நீண்ட காலமாக அறியப்படுகின்றது. இதனை கடுகு எண்ணெயுடன் கலக்கும் போது வலுவான இயல்புகளைப் பெறுகிறது. 250 மி.லி. கடுகு எண்ணெய் மற்றும் 60 கி என்ற அளவில் இந்த கலவை தயாரிக்கப்படுகிறது. மருதாணி இலைகள் முழுமையாக நிறம் மாறும் வரை அதனை சூடு படுத்த வேண்டும். இக்கலவையை குளிர்வித்த பின் மூடியுடன் கூடிய கொள்கலனில் அதனை வைக்கவும். தினமும் இந்தக் கலவையை தலையில் தேய்த்து வர வேண்டும்.
செம்பருத்தி
செம்பருத்தி நம் தலைக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது முடி நரைப்பதை தடுப்பதற்கும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. செம்பருத்திப் பூவை தொடர்ந்து பயன்படுத்துவது உங்களை வழுக்கையிலிருந்து பாதுகாக்கும். இந்தியாவில் உள்ள கேரள மக்கள் தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி கலந்து பயன்படுத்துவதே அவர்களது அடர்த்தியான கூந்தலுக்கு காரணம் ஆகும். நீங்களாகவே செம்பருத்தி பேஸ்ட் தயாரித்து உச்சந்தலை மற்றும் முடிகளில் தேய்த்து வரலாம். இரண்டு செம்பருத்திப் பூவை எடுத்துக் கொண்டு, அதனை எள் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அதனை தேய்த்து 2-3 மணிநேரங்களுக்கு பின் தலையை அலசவும்.

728