new BB1

ஆரஞ்சு லஸி

Loading...

ஆரஞ்சு லஸிஆரஞ்சு பழம் – மூன்று
கெட்டியான தயிர் – இரண்டு கப்
சர்க்கரை – இரண்டு மேசைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
சினமன் பௌடர் – ஒரு சிட்டிகை(தேவைப்பட்டால்)

ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து எடுத்து, அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி கொள்ளவும்.

ஆரஞ்சு தோல் உரிக்கும் போது ஓரே சீராக ஏதேனும் ஒரு வடிவத்தில் வருமாறு உரித்து வைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்.

சினமனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சை கூழ் போல அரைத்து அதனுடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

உரித்து வைத்திருக்கும் ஆரஞ்சு தோலில் லஸியை ஊற்றி மேலே பொடி செய்த சினமனை தூவி பரிமாறவும்.

சுவையான ஆரஞ்சு லஸி ரெடி

Loading...
728
2