new BB1

ஆலு கோபி ப்ரை

Loading...

ஆலு கோபி ப்ரைஆலு (உருளை) – இரண்டு
கோபி (காலிப்ளவர்) – சிறிய பூ ஒன்று
தாளிக்க‌:
எண்ணெய் – 4 தேக்கரண்டி
க‌டுகு ‍ – அரை தேக்க‌ர‌ண்டி
உளுத்த‌ம் ப‌ருப்பு – ஒரு தேக்க‌ர‌ண்டி
காய்ந்த மிள‌காய் – மூன்று
க‌றிவேப்பிலை – சிறிது
காஷ்மீரி மிளகாய் பொடி – ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் – கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு – தேவைக்கு
பூண்டு பொடி (அ) பெருங்காயப்பொடி – தேவைக்கு

காலிப்ளவ‌ரை பெரிய‌ பூக்க‌ளாக‌ பிரித்தெடுக்க‌வும். உருளைக்கிழங்கையும் பெரிய‌ துண்டுக‌ளாக‌ ந‌றுக்க‌வும், ஒரு ச‌ட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வைத்து சிறிது‌ உப்பு சேர்த்து காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு ப‌த்து நிமிட‌ம் ஊற‌ வைத்து வெந்நீரை வ‌டித்து விட‌வும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் தண்ணீர் வடித்து வைத்துள்ள காலிப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.

நன்கு கிளறிய பிறகு மூடி வைத்து தீயின் அளவை குறைத்து வைத்து 5 நிமிடம் வேக விடவும்.

அதனுடன் மிள‌காய் தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காய‌ பொடி (அ)பூண்டு பொடி தூவி நன்கு கிளறி மீண்டும் ஐந்து நிமிட‌ம் வேக‌ விட‌வும்.

க‌டைசியாக‌ தீயின் அள‌வை அதிக‌மாக வைத்து மொறுக‌ளாக‌ வ‌றுத்து அடுப்பை அணைக்க‌வும்.

சுவையான‌ கார‌ சார‌மான‌ ஆலு கோபி ரெடி.

Loading...
728
2