new BB1

இன்றைய ராசி பலன் 2015.09.01

Loading...


மேஷம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள்.குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கொடுக்கல்- வாங்கல்களில் அதிக அக்கரை காட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

ரிஷபம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். செல்வாக்கு உயரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.

மிதுனம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசு வழி அனுகூலம் கிடைக்கும்.

கடகம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். மனக்கலக்கங்கள் மாறும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாமன், மைத்துனர்வழியில் இனிய செய்தியன்று வந்து சேரும். பயணம் பலன் தரும்.

சிம்மம்
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குழந்தைகளால் சிறு சிறு பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கவனமுடன் கையாள்வது நல்லது.

கன்னி
முன்னேற்றம் கூடும்நாள். வாழ்க்கைத் துணை வழியே வசந்தம் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சி வெற்றி தரும்.

துலாம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
வளர்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.

தனுசு
திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில், வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்
சகோதர வழியில் ஒற்றுமை கூடும் நாள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும்.

கும்பம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களால் தொழிலுக்கு உதவி கிடைக்கும்

மீனம்
மனஅமைதி கூடும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். வழிபாடுகளில்
நம்பிக்கை கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.

Loading...
728
2