new BB1

ஈஸி உருளை போண்டா

Loading...

ஈஸி உருளை போண்டாமசாலா:
1. உருளைகிழங்கு – 2
2. மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
3. கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
4. உப்பு – தேவைக்கு
மேல் மாவு:
1. கார்ன் மாவு – 1/2 மேஜைக்கரண்டி
2. ப்ரெட் தூள் – 1 (அ) 2 மேஜைக்கரண்டி

கார்ன் மாவு மற்றும் ப்ரெட் தூள் ஒன்றாக கலந்து வைக்கவும்.
உருளைகிழங்கு வேக வைத்து நீர் இல்லாமல் உரித்துவிட்டு மசிக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து நன்றாக பிசையவும்.
இவற்றை உருண்டைகளாக உருட்டி, கார்ன் மாவு கலவையில் பிரட்டி வைக்கவும். (பிரட்டிவிட்டு ஒரு முறை கையில் சாதம் உருட்டுவது போல் உருட்டினால் தேவை இல்லாத அதிகப்படியான தூள் விழுந்துவிடும்)
கடாயில் எண்ணெய் காய வைத்து இந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.

Loading...
728
2