new BB1

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அருமருந்து முள்ளுசீதா பழம்

Loading...

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அருமருந்து முள்ளுசீதா பழம்முள்ளுசீதா எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது. இது ஒரு சிறிய பழம்தரும் மரம். இது சீதா வகையைச் சேர்ந்தது. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். காய்கள் பச்சையாக சிறுசிறு முள் நுனிகளுடன் நீள்வட்ட வடிவில் பெரிதாக இருக்கும். சுமார் 30 சென்ரிமீட்டர் அளவு இருக்கும்.
உள் பாகத்தில் விதைகளுடன் வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும். இதன் பழம் உண்ணக்கூடியது. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து அன்னாசிப்பழம் போன்று இதன் சதைப்பகுதிகள் சுவை இருக்கும். முள்ளுசீதா மரம் அமேசன் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன்படுத்தி குணம் கண்டனர்.
முக்கியமாக இதன் இலை,பழம் இவைகளை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தினார்கள். ‘கிமோதெரப்பி’ என்னும் சிகிச்சையில் முடி கொட்டி விடுகிறது மற்றும் உடல் மெலிந்து எடை குறைந்து விடுகிறது. ஆனால் இயற்கையான முள்சீதாவில் அதைவிட புற்றுநோய் கலங்களைக் கொல்வதில் 10,000 மடங்கு சக்தி வாய்ந்தது.
அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதன் இலைகள் மருத்துவ குணம் இருப்பதால் காயவைத்துப் பதப்படுத்தி தேனீர் போன்ற பானமாக மேல்நாட்டில் அருந்துகிறார்கள். முள்ளுசீதா 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டு பிடித்தார்கள். மேலை நாடுகளில் பலநாடுகள் இதன் மருத்துவ குணம் நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தினர்.
அவை புற்றுநோய் கட்டிகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், கர்ப்பப்பையில் புற்றுநோய்கள், மார்பகப்புற்று நோய் அகியவற்றைக் குணப்படுத்தினர். இரத்த அழுத்தம், குறைவு, அதிகரிப்பு இவைகளையும் குணப்படுத்தினர். மேலும் ஆஸ்மா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், புண், குடல் புண், புளுகாய்ச்சல், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, நடுக்கம், பதட்டம், இருதயக்கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, இருமல், வயிற்றுவலி போன்ற நோய்களையும் இதன் மூலம் குணப்படுத்தினர்.
மருந்து உண்ணும் அளவு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மேல் மிகாமல். அதிகமாக உட்கொண்டால் வாந்தியை உண்டு பண்ணி பக்க விளைவுகள் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய உணவுப் பழக்கம், அளவுக்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் ஆகியவை புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது.

Loading...
728
2