new BB1

காபேஜ் கோப்தா கறி

Loading...

காபேஜ் கோப்தா கறி
கோப்தாவிற்கு
கோஸ் – பாதி
கடலை பருப்பு – 3 தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் – மூன்று
கடலை மாவு – கால் மேசைக்கரண்டி
அரிசி மாவு – கால் தேக்கரண்டி
தேங்காய் – மூன்று மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவிக்கு
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் – மூன்று தேக்கரண்டி
தயிர் – ஒரு கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி

கோஃப்தா செய்ய: கோஸை பொடியாக நறுக்கி கடலை பருப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்ததும் எடுத்து நீரை நன்றாக வடித்து விட்டு ஆறியதும் கோஸில் உள்ள நீரை பிழிந்து எடுத்து விடவும். அதனுடன் சீரகம், மிளகாய் தூள், தேங்காய், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாயை சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து அரை மணி நேரம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் முட்டைகோஸ் கலவையை சிறு சிறு உருண்டையாக உருட்டி போட்டு பொரிந்ததும் எடுக்கவும்.

எண்ணெயில் போட்டவுடன் கரண்டியால் திருப்பி விடக்கூடாது. அப்படி திருப்பி விடும் போது கோஃப்தா உடைந்து விடும். கோஃப்தா பொரிந்து மேல் எழும்பி வந்த பின்னர் வெந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

கிரேவி செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்து தூள்களையும் தயிரில் கலந்து வதக்கியவற்றுடன் ஊற்றவும்.

கிரேவி திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். கொதிக்க ஆரம்பித்ததும் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரைத்து வந்ததும் பொரித்து வைத்துள்ள கோப்தாகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான கேபேஜ் கோஃப்தா கறி ரெடி. மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Loading...
728
2