new BB1

கிட்ஸ் பனானா மஃபின்

Loading...

கிட்ஸ் பனானா மஃபின்மைதாமாவு – 2 கப் (250 கிராம்)
சர்க்கரை – 1 1/4 கப் (150 கிராம்)
கனிந்த வாழைப்பழம் – 3
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
முட்டை – ஒன்று (பெரியது)
வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால் மட்டும்)
உப்பு – ஒரு சிட்டிகை

முதலில் மைதாமாவை சலித்துக்கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். பின் வெண்ணெயை சர்க்கரையுடன் நன்றாக பீட்டரால் அடித்துக்கொள்ளவும். அதனுடன் முட்டையை ஊற்றி நன்றாக அடிக்கவும். பின் வாழைப்பழக்கலவையை ஊற்றி அடிக்கவும். அதில் பால், வெனிலா எசன்ஸ் ஊற்றி கலக்கவும்.
இப்போது அவனை 350 F set செய்து முற்சூடு செய்தால் சரியாக இருக்கும்.
கடைசியாக மைதாமாவை சிறிது சிறிதாக கொட்டி மரக்கரண்டியால் ஒரே சீரான வேகத்தில் கலக்கவும். (mix and fold method)
நன்றாக கலந்தவுடன் அதை கப் மோல்டுகளில் பேக்கிங் (parchment) பேப்பர் போட்டு அது இல்லையென்றால் மோல்டுகளில் வெண்ணெய் அல்லது பேக்கிங் ஸ்பிரே தடவி கலவையை ஊற்றவும். மேற்கூறியவற்றை செய்து
முடித்தவுடன் முற்சூடு செய்த அவனில் பேகிங் ட்ரேயில் கப்களை அடுக்கி 40 நிமிடங்கள் வைத்து (மஃபின் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை)எடுக்கவும்.

Loading...
728
2