new BB1

சிக்கன் ராப்ஸ்

Loading...

சிக்கன் ராப்ஸ்சிக்கன் – 500 கிராம் (எலும்பு இல்லாத கோழியின் நெஞ்சுப் பகுதி தான் நல்லது)
ஐஸ்பெர்க் சலாட் – 200 கிராம்
மயோனிஸ் அல்லது விருப்பமான சாஸ் – தேவையான அளவு
குடைமிளகாய் – ஒன்று
வெள்ளரிக் காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி – 2 (வட்டமாக நறுக்கியது)
ராப்ஸ் ரொட்டி – 8
சீஸ் தூள் – கால் கப் (விரும்பினால்)
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சலாட்டையும் குடைமிளகாயையும் நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ராப்ஸ் ரொட்டியை ஒரு நிமிடம் மைக்ரோ ஓவனில் சூடாக்கவும். பின்பு ரொட்டியின் நடுவில் மயோனிசை நீளமாக விடவும்.

அதன் மேல் சலாட்டை வைக்கவும் விரும்பினால் சீஸ்தூளை தூவவும்.

பின்னர் 2 துண்டு வெள்ளரியும், குடைமிளகாயையும் வைக்கவும்.

அதற்கு மேல் 2 துண்டு தக்காளியை வைக்கவும்.

எல்லாவற்றிற்கும் மேலே பொரித்த ஒரு சிக்கனை துண்டை நடுவில் வைக்கவும்.

முதலில் படத்தில் காட்டியுள்ளது போல் ராப்ஸ் ரொட்டியை கீழே மடக்கவும்.

பின்பு இரு பக்கமும் மடிக்கவும். அதே போல் முழுவதையும் செய்து பரிமாறவும். சுவையான சிக்கன் ராப்ஸ் ரெடி.

Loading...
728
2