new BB1

பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும்

Loading...

பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும்பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. ( அதாவது கால தாமதமாய் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டதுகுறைந்த அளவே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.அதிக உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் இந்த பழத்தை தொடமலிருப்பது நல்லது.மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.

Loading...
728
2