new BB1

புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை

Loading...

புதியமுறையில் இருதய அறுவை சிகிச்சை  சென்னை மருத்துவர்கள் சாதனைஇருதயப் பகுதியை திறக்காமலேயே வயதான பெண்மணி ஒருவருக்கு சென்னையிலுள்ள மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
மேற்குலக நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் அபூர்வமாகச் செய்யப்படும் சூழலில், இந்தியாவில் முதல் முறையாக நவீன முறையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதைச் செய்த டாக்டர் ராஜாராம் அனந்தராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சென்னியிலுள்ள ஃப்ராண்டயர் லைஃப்லைன் மருத்துவமனையில், 81வயது பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காலில் ஒரு துளையிட்டு அதன் மூலம் சேதமடைந்த ரத்தக்குழாய்க்கு பதிலாக செயற்கை வால்வை மற்றொரு நுண்ணியக் கருவியில் பொருத்தி அதன் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் டாக்டர் அனந்தராமன் தெரிவித்தார்.
தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த செயற்கை வால்வுகள் பத்து லட்சம் ரூபாய்க்கு அதிமான விலை கொண்டவையாக இருந்தாலும், இனிவரும் காலங்களில் அவற்றின் விலை குறையும் சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து பிபிசி தமிழோசையிடம் அவர் பகிர்ந்து கொண்டத் தகவல்களை இங்கே கேட்கலாம்.

Loading...
728
2