new BB1

பெண்களுக்கான பல பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்..

Loading...

பெண்களுக்கான பல பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்..* குளிப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.-
* உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.
* பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.
* வாரம் 5 முறையாவது உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது, எடை குறைகிறது, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
* உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும்.
* ஆரஞ்சு ஜூஸ் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்.
* கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளி ஜூஸ் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.மேனகா – நாமக்கல்எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.
* தக்காளி சாறு : சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.
* பப்பாளி : முகத்தில் சுருக்கம் விழுவதையும் தற்காலிகமாக ஒத்திப்போடும்.
* சிட்ரஸ் பழங்கள் : ப்ளீச்சிங் ஏஜெண்ட் . சருமத்தின் எண்ணெய் பசையை கட்டப்படுத்துகின்றன.
* உருளை : கண்களுக்கு அடியில் வீக்கம் இருந்தால் உருளை துண்டுகளை கண்ணுக்கடியில் வைக்கவும். வீக்கம் குறையும்.எம். அருள் வாணி
* உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை `ஸ்டைல்‘ செய்ய முடியாது.
* குளித்தவுடன் புருவத்தை ஷேப் செய்தால் வலி தெரியாது. அல்லது வெந்நீரில் பஞ்சை நனைத்து, புருவத்தின் மேல் தடவிய பிறகும் ஷேப் செய்யலாம்.
* “ப்ளஷ்” (Blush ) எங்கே தடவ வேண்டும் என்று சந்தேகம் இருந்தால், அதை சுலபமாக தீர்க்கலாம். 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்கவும். கன்னங்களில் சிவந்திருக்கும் இடத்தில் தான் `ப்ளஷ்‘ தடவ வேண்டும்!
* மேலே பார்த்தவாறு ஒரு விரலால் உங்கள் புருவத்தை மேல் நோக்கி தள்ளவும். அதன் பிறகு கீழே பார்த்தவாறு மேல் கண் இமையில் மஸ்காரா தடவவும்.
* உங்கள் புருவங்களை குளித்த பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும்.
* காதில் போடும் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.
* தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

Loading...
728
2