new BB1

ப்ரெட் சாண்ட்விச்

Loading...

ப்ரெட் சாண்ட்விச்ப்ரெட் – 12
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
கோஸ் – ஒரு கப்
ஸ்வீட் கார்ன் – சிறிது
மைதா – 2 தேக்கரண்டி
பால் – கால் கப்
வெண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – தேவைக்கு

காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருகியதும் நறுக்கி வைத்திருக்கும் காய்களை போட்டு லேசாக வதக்கவும்.

அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

பின்னர் வெந்ததும் திறந்து மைதாவை சேர்த்து அரை நிமிடம் கிளறி விடவும்.

இந்த காய்கறி கலவையில் பாலை ஊற்றி மேலும் அரை நிமிடம் கிளறவும்.

ப்ரெட் துண்டுகளின் உள்பக்கம் வெண்ணெய் தடவவும்.

வெண்ணெய் தடவிய பக்கத்தில் காய்கலவையை வைத்து இன்னொரு ப்ரெட் துண்டால் மூடவும். ப்ரெட்டின் மேல் பக்கமும் வெண்ணெய் தடவி, டோஸ்டரில் (சாண்ட்விச் மேக்கர்) வைத்து டோஸ்ட் செய்யவும்.

சூடாக சாப்பிட சத்தான, சுவையான ப்ரெட் சாண்ட்விச் ரெடி

Loading...
728
2