new BB1

மலை வாழைப்பழம் அஜீரண கோளாறை சரிசெய்யும்

Loading...

மலை வாழைப்பழம் அஜீரண கோளாறை சரிசெய்யும்இந்த பழத்தின் விலை சற்று அதிகம். சாமானிய மக்களுக்கு எட்டாத பழம் இது. வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம். நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.

இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும். சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும். பசியினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும். நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர அஜீரண கோளாறுகள் நீங்கும். சற்று பேதியாகும். பயப்பட வேண்டாம்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது. பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்

Loading...
728
2