new BB1

மைக்ரோவேவ் முட்டைகோஸ் துவையல்

Loading...

மைக்ரோவேவ் முட்டைகோஸ் துவையல்முட்டைக்கோஸ் – அரைக் கிலோ
சீரகம் – அரை தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல்
பச்சை மிளகாய் – ஒன்று (காரத்திற்கேற்ப)
தக்காளி – ஒன்று
புதினா இலைகள் – 10
கறிவேப்பிலை இலை – ஒரு கீற்று
புளி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது

முட்டைகோஸை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு கிளறிக் கொள்ளவும்.

பாத்திரத்தை மைக்ரோ ஹையில் ஒரு நிமிடம் வைத்து நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் நறுக்கின தக்காளி, புதினா மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறி மீண்டும் அந்த பாத்திரத்தை மைக்ரோ ஹையில் ஒரு நிமிடம் வைக்கவும்.

பின் அதை எடுத்து தனியே வைத்து விட்டு அதே பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் முட்டைகோஸ் துருவலை போட்டு மைக்ரோ ஹையில் 10 நிமிடங்கள் வைக்கவும். (நிறம் மாறி பழுப்பு நிறமாகும் வரை, கருக விடாமல் பார்த்துக் கொள்ளவும்)

பிறகு எல்லாவற்றையும் எடுத்து மிக்ஸியில் போட்டு சிறிது புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

கடைசியாக எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் போடவும்.

சுவையான முட்டைகோஸ் துவையல் தயார்.

Loading...
728
2