new BB1

ராகி பானம்

Loading...

ராகி பானம்ராகி பவுடர் – இரண்டு தேக்கரண்டி
பால் – முக்கால் டம்ளர்
தண்ணீர் – 1 1/2 டம்ளர்
சர்க்கரை – நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் – ஒன்று
நெய் – ஒரு சொட்டு
சஃப்ரான் – நான்கு இதழ்

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.

வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.

கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.

அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.

Loading...
728
2