new BB1

வெஜ் சேமியா கிச்சடி

Loading...

வெஜ் சேமியா கிச்சடிசேமியா -1கப்
கேரட் -1
பீன்ஸ் -5
கோஸ் -சிறிது
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -11/2கப்
பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
எண்ணை -1ஸ்பூன்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது

காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கி வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு சேமியாவை வறுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்களை போட்டு நன்கு வதக்கவும்.மஞ்சள்தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கி 1கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய் வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறி வேகவிடவும்.தண்ணீர் வற்றி சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Loading...
728
2