new BB1

BASICARE அழகுசாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் உங்கள் அழகை மீட்டெடுங்கள்!

BASICARE அழகுசாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் உங்கள் அழகை மீட்டெடுங்கள்!கொழும்பின் மிக பிரபல்யமான கடைத்தொகுதிகளில் சொப்பிங் செய்வோருக்கு முகம், உடல் மற்றும் கூந்தல் பராமரிப்புகளுக்கான உயர் தரமான அழகுசாதன பொருட்கள் மற்றும் உபகரணத் தெரிவுகளை வழங்கி வரும் Basicare எனும் பெயர் மிகவும் பரீட்சயமானது.
Basicare இன் முதன்மை கவனம் என்பது சர்வதேச தரங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை பேணுவதில் மாற்றங்களை ஏற்படுத்தாது கடைபிடித்தலாகும். இந்த அழகுசாதன வர்த்தகநாமமானது தம்மை அழகாகவும் மற்றும் தன்னம்பிக்கையுடனும் காட்டிக்கொள்ள விரும்பும் இலங்கையின் நவீன பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இதன் உற்பத்தி வரிசையில் அழகுசாதன பொருட்கள், மெனுகியுர், பெடிகியுர், பாத் அன்ட் பொடி, பரிசுப்பொதிகள் மற்றும் kits போன்றன உள்ளடங்கியுள்ளன.
சருமம் மற்றும் அழகு பராhமரிப்பு துறையில் இலங்கையில்; பரந்துபட்ட அழகுசாதன பொருட்களை வழங்கிவரும் முன்னோடியான DermaCare (பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் Basicare சந்தைப்படுத்தப்படுகிறது. My Chemist குழும நிறுவனங்களின் அங்கத்துவத்தை கொண்ட DermaCare (பிரைவற்) லிமிடெட் ஆனது, கடந்த தசாப்தங்களில் உள்நாட்டு பாவனையாளர்களின் தேவைகளை நன்குணர்ந்து கொண்டுள்ளது. இந் நிறுவனமானது அழகுசாதனங்கள் பிரிவில் உலகளாவிய புதிய போக்குகளுக்கு ஏற்ப, இலங்கையில் Basicare இன் புதுமையான உற்பத்தி தெரிவுகளை வழங்கி வருகிறது.
நவநாகரிகமான மற்றும் இளமையான இலங்கைப் பெண்கள் தற்போது ஒரே வர்த்தகநாமத்தின் கீழ் அனைத்து அழகுசாதன பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும். Basicare இன் உற்பத்தி தெரிவுகளான tweezers பிரஸ் வகைகள், ஸ்பொன்ஜ் மற்றும் ஏனைய பொருட்கள் ஆகியன நவநாகரீகமான பெண்கள் தங்கள் அழகினை மெருகேற்றிக் கொள்ளவும், நேர்முகத்தேர்வுகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் போது முதல் ஈர்ப்பினை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
இன்றைய தொழில்புரியும் பெண்கள் Spa இற்கு செல்வதை நேரம் வீணடிக்கப்படுவதாக கருதுகின்றனர். இதற்கு கத்தரிக்கோல், nail clippers, nail files, nail buffers மற்றும் emery boards போன்றவற்றை கொண்ட basicare இன் வர்ணமயமான மெனிகியுர் மற்றும் பெடிகியுர் தெரிவுகளை பயன்படுத்துவது மிகச்சிறந்த தீர்வாக அமையும். இந்த உபகரணங்கள் உங்கள் கைகள் மற்றும் கால்களை இளமையாகவும், மென்மையாகவும் மாற்றமடையச் செய்கிறது. Basicare ஆனது பயன்படுத்துபவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் உற்பத்திகளை வழங்கி வருகிறது. Basicare இன் exfoliating mitts மற்றும் hydro moisturizing கையுறைகள் உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்கிறது.
“முகம், உடல் மற்றும் கூந்தல் ஆகியவற்றுக்கான Basicare பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தங்கள் தோற்றம் மீது அதிக கவனம் செலுத்தும் இளமையான நவநாகரீகத்தில் அக்கறையுள்ளோர் மற்றும் பரபரப்பான நிபுணர்களுக்கு மிகச்சிறந்த தெரிவாக அமையும். இந்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கடுமையான தர கட்டுப்பாடுகளுக்கமைய உருவாக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு சகாயமானதாக காணப்படுகிறது. Basicare தெரிவுகள் Odel – Backstage ஆர்பிகோ சுப்பர் சென்டர்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள அழகுசாதன கடைத்தொகுதிகள் போன்றவற்றில் விற்பனைக்குள்ளன. அழகு மீது அக்கறை காட்டும் பெண்களுக்கு Basicare உற்பத்திகளை சிறந்த வகையில் வழங்கும் முகமாக இலங்கையில் எமது பிரசன்னத்தை விஸ்தரிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். எமது 2015 தொகுப்பில் பரந்தளவிலான தெரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் அழகு மீது அக்கறை காட்டும் பெண்கள் மிகச்சிறந்த பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக அமைந்துள்ளது” என DermaCare நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் ஜயசேகர தெரிவித்தார்.
ISO 9001: 2000 ளுபுளு சான்றிதழ் பெற்ற Basicare வர்த்தகநாமமானது Influx Industry Inc மூலம் கடுமையான தர கட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்கள், தொழிற்துறை வடிவமைப்புகள், சர்வதேச பாதுகாப்பு தேவைகளுக்கமைய உற்பத்தி செயல்பாடு மற்றும் பொதியிடல் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Basicare உற்பத்திகள் பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா, USA, இந்தியா, கொரியா, தாய்வான், ஹொங்கொங், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள 42 நாடுகளில் கிடைக்கின்றன.

728