new BB1

சரத்குமார் கருத்துக்கு பதிலடி கொடுத்த சோனக்ஷி சின்ஹா

Loading...

தமிழர்களின் வீரவிளையாட்டு என கருதப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது அனைவரும் அறிந்ததே. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசிதழில் ஆணை வெளியிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த முயற்சிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, “ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கும்படி என்னுடைய ரசிகர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். காளைகளை காப்பாற்றுங்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.சோனாக்ஷி சின்ஹாவின் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகின்றது. பெரும்பாலானோர் சோனாக்ஷி சின்ஹாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

728

2